(Updated) ஏறாவூர் இரட்டைக் கொலைச் சம்பவம்: ஏறாவூரைச் சேர்ந்த எம்.பிளாள், வி.சப்ரின் கைது

    0
    14020

    (விசேட நிருபர்)

    ஏறாவூர் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

    ஏறாவூர் முகாந்திரம் வீதியை அன்மித்த பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 11.9.2016 அன்று தாயும் மகளும்; கொலை செய்யப்பட்ட சம்பவம் தொர்பிலேயே மேற்படி இரண்டு பேரையும் நேற்றிரவு(19.9.2016) ஏறாவூர் பொலிசார் கைது செய்துள்ளனர்.

    ஏறாவூரைச் சேர்ந்த எம்.பிளாள், மற்றும் வி.சப்ரின் ஆகிய இருவருமே நேற்றிரவு கைது செய்யப்பட்டவர்கள் என பொலிசார் குறிப்பிட்டனர்.

    ஏறாவூரில் கடந்த 11.9.2016 அன்று தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்டவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலயில் கடந்த சனிக்கிழமை(17.9.2016) அன்று மூன்று பேர் கைது செய்யப்பட்டு பொலிசார் அவர்களை விசாரித்து வரும் நிலையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஆறு பேர் பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    LEAVE A REPLY