“நீர்க்காகம்”என்ற விஷேட தாக்குதல் பயிற்சியின் இறுதிநாள் நிகழ்வு

0
154

(அப்துல்சலாம் யாசீம்-)

unnamed-1இலங்கை இரானுவத்தினால் 07 வது தடவையாக நடாத்தப்பட்டு வருகின்ற “நீர்க்காகம்”என்ற விஷேட தாக்குதல் பயிற்சியின் இறுதிநாள் நிகழ்வு இன்று (20) காலை புல்மோட்டை-அரிசி மலைப்பகுதியில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி -பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் கோலித்த குணதிலக-இரானுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா உட்பட முப்படை உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

unnamed-2கடந்த 04ம் திகதி ஆரம்பமான இந்ந விஷேட தாக்குதல் பயிற்சி கொக்கிளாய் முதல் அரிசிமலலை பிரதேசம் வரை இடம்பெற்றது.

இதில் 2500 காலாட் படையினரும் 638 கடற்படையினரும் 506 விமானப்படையினரும் மற்றும் பங்களாதேஷ்-சீனா-இந்தியா-சூடான்-மாலைதீவு- நேபாளம்-பாகிஸ்தான்-அமேரிக்கா போன்ற நாடுகளைச்சேர்ந்த 49 வௌிநாட்டு படை வீரர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY