காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை தொடர்பிலான விசேட கலந்துரையாடல்

0
471

(ஆதிப் அஹமட்)

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீனின் ஏற்பாட்டில் நேற்று (19) பிற்பகல் மூன்று மணியளவில் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மேற்படி கூட்டத்தில் சுகாதார பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான பைசல் காசிம் கலந்து கொண்டார்.

180 மில்லியன் ரூபா செலவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களால் அபிவிருத்தி செய்து வளர்க்கப்பட்ட யூனானி வைத்திய முறைக்கான போதனா வைத்தியசாலை தொடர்பில் விசேடமாக இதன்போது ஆராயப்பட்டது.

அத்துடன் பிரதியமைச்சர் பைசால் காசிமினால் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்காக இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பல மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.எம்.எஸ்.எம்.ஜாபிர் விளக்கிக் கூறியதுடன் தனது நன்றிகளையும் பிரதியமைச்சருக்கு தெரிவித்தார்.

மேலும் விசேடமாக ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள இரத்த வங்கி, உளவளத்துறை ஆலோசனை பிரிவுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், மருத்துவ தாதிகள் நியமிக்கப்பட்டுள்ளமைக்கும் விசேடமாக பிரதியமைச்சருக்கு இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.

img_20160919_153702 img_20160919_153713 img_20160919_155133

LEAVE A REPLY