காங்கேயனோடை விளையாட்டுக் கழகத்திற்கு NFGG உதவி!

0
254

(ஊடகப் பிரிவு)

காங்கேயனோடை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியி(NFGG) னால் விளையாட்டு உபகரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நேற்று முன்தினம் (18) காங்கேயனோடையில் நடை பெற்ற நிகழ்வொன்றின் போதே மேற்படி இந்த உபகரணங்கள் NFGGயினால் வழங்கி வைக்கப்பட்டன.

காங்கேயனோடை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத் தலைவர் MM. சுல்தார் அவர்களின் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அவர்களும், அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான அஸ்செய்க் MBM. பிர்தௌஸ் நழீமி, பொறியியலாளர் பழ்லுல் ஹக் அவர்களும், மற்றும் NFGG யின் காத்தான்குடி தலைமைத்துவ ஆலோசனை சபைச் செயலாளர் MACM ஜவாஹிர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மிகவும் குறைந்த வளங்களுடன் இயங்கி வரும் காங்கேயனோடை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகமானது தமக்குத் தேவையான வளங்களைப் பெற்றுத் தருமாறு NFGG யிடம் கோரியிருந்தது.

இது தொடர்பில் NFGGக்கும் நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் சந்திப்பொன்று சில வாரங்களுக்கு முன்னர் நடை பெற்றுமிருந்தது. தேவையான பல உதவிகளில் முதற் தொகுதி உதவிகளை விரைவில் வழங்குவதாக NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் உறுதியளித்திருந்தார். அதற்கமைவாகவே இந்த முதற்கட்ட உதவிகள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வின் போது NFGGயின் சமூக அரசியல் பார்வைகள் அதனடிப்படையிலான வேலைத்திட்டங்கள் பற்றி பிர்தௌஸ் நழீமி அவர்களும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களும் உரைகளை ஆற்றினர்.

இந்நிகழ்வில் NFGGயின் காங்கேயனோடை பிரதேச பிரதிநிதிகளான சிறாஜ் மௌலவி, மற்றும் ULM ஹபீழ் ஆகியோரும் காத்தான்குடி பிரதேச தலைமைத்துவ சபை உறுப்பினர்களான MACM முஹ்ஸின், MM.சித்தீக், நஸீர் மௌலவி, UL. றபீக், MAM பைசர், ACM. நஜ்மில் ஆகியோரும் நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் SM நுபைர், அதன் முகாமையாளர் MHM றம்ழான், அதன் ஆலோசகர் MAM. பாயிஸ் உட்பட அதன் உறுப்பினர்களும் இன்னும் பல உள்ளூர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

img-20160919-wa0004 img-20160919-wa0007 img-20160919-wa0009 img-20160919-wa0012

LEAVE A REPLY