பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று

0
248

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று மதியம் முதல் வெட்டுப்புள்ளிகள் இணையத்தில் வெளியிடப்படும் என்று அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தினூடாக மாணவர்கள் தமது வெட்டுப்புள்ளிகளை பார்வையிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தமுறை சாதாரண விஷேட அனுமதி மூலம் 27,600 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY