காத்தான்குடியில் இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் ஆரம்பித்து வைப்பு

0
115

(விசேட நிருபர்)

காத்தான்குடியில் திங்கட்கிழமை (19.9.2016) இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான யு.எல்எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோளின் பெயரில் சுகாதார சுதேச மருத்துவப் பிரதியமைச்சர் பைசல் காசிம் அவர்களின் அனுசரணையில் இந்த இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

unnamed-4காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் இந்த வைத்திய முகாம் நடைபெற்றது.

இந்த ஆயுர்வேத வைத்திய முகாமை சுகாதார சுதேச மருத்துவப் பிரதியமைச்சர் பைசல் காசிம் ஆரம்பித்து வைத்தார்.

ஆரம்ப வைபவம் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான யு.எல்எம்.என்.முபீன் தலைமையில் நடைபெற்றது.

unnamed-7இதில் காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் மற்றும் அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எல்.நக்பர் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் உட்பட கொரிய மற்றும் இலங்கை ஆயுர்வே வைத்தியர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

unnamed-8எல்லோரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தொற்றா நோய்களான சர்க்கரை வியாதி, உயர் குருதியமுக்கம், கொலஸ்திரோல் ஆஸ்துமா, தோல் வியாதி, வாதம் மற்றும் கண், காது, மூக்கு சிகிச்சை உற்பட நாற்பட்ட நோய்களுக்குமாக முற்றிலும் இலவசமாக இவ்வைத்திய முகாமில் சிகிச்சை வழங்கப்படுகின்றது

கொரிய இலங்கை ஆயுர்வேத வைத்திய நிபுணர்கள் இவ்விசேட வைத்திய முகாமில் கலந்து கொண்டு சிகிச்சைகளை வழங்கவுள்ளதுடன் கொரிய நாட்டு வைத்திய நிபுணர்களின் அக்குபஞ்சர் வைத்திய சிகிச்சையும் இடம்பெறவுள்ளது. இதன்போது விசேடமாக முழு உடற்பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது.

unnamed-9

unnamed-10

unnamed-11

LEAVE A REPLY