பந்தா

0
252

(Mohamed Nizous)

அடுத்தவரைக் கண்டவுடன்
அரை குறை ஆங்கிலத்தில்
படுத்திருக்கும் பிள்ளையுடன்
பட படன்னு பேசிடுவார்
உம்மாவின் கலர்ஸ்களை
உணர்ந்து கொள்ளா சிறு பிள்ளை
சும்மா இருக்கும்
சுத்தமாய் தமிழ் கதைக்கும்
அம்மியின் நிறம் போல
மம்மியின் முகம் கறுக்கும்.

சபையிலே இருந்து கொண்டு
சத்தமாய் கோல் கதைப்பார்
துபாயில இருக்கின்ற
தூரத்து சொந்தத்துடன்.
வரும்போது தங்க மாலை
வாங்கி வா என்று சொல்வார்.
கருமத்துக்கு பிள்ளை கேட்கும்
Cutஆன SIMல்
கதைத்தது எப்டிம்மா?

எங்கிட ஹஸ்பண்ட்
இருவாரம் முன்னாலே
ஹொங்கொங்கில் இருந்து
கொண்டு வந்த பேர்ஸ் என்பார்.
அந்த நேரம் ஒரு பாவி
ஐம்பது ரூபாக்கு ரெண்டு என
வந்து விற்பான் அதே பேர்ஸை
வடியும் அசட்டுக்கு வார்த்தைகள் இல்லை

பேஷ்புக் profileல்
பெரிதாகப் போடுவார்
ஹூஸ்டன் காலேஜில்
கூட நாள் படித்த என்று
போஸ்ட்களைக் கொஞ்சமாய்
புலனாய்வு செய்து பார்த்தால்
ஆசாமி லோக்கலில்
அஞ்சாம் கிளாஸ் பெய்லாகி.

கல்யாண வீட்டுக்கு
கலக்கலாய் வருவார்
முள்ளுக் கரண்டியாலே
முயற்சித்து உண்பார்
அள்ளி வாயினிலே
அமுக்கும் போதினிலே
உள்ளதில் பாதியுணவு
உடையிலே கொட்டி விடும்.

ஊரார்க்கு படம் காட்ட
உண்மை நிலை மறைத்து
பேருக்கு செய்வதினால்
பிரதி பலன் ஏதும் உண்டா?
யாருக்கும் தெரியும்
எது உண்மை என்று
பேருக்கு செய் வேலை
வேருடன் கெட்டு விடும்.

LEAVE A REPLY