அஷ்ஷெய்ஹ் காரி அப்துல் ஜப்பார் காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தினால் கௌரவிப்பு

0
286

(விசேட நிருபர்)

unnamed-2சிரீலங்கா கதீப் முஅத்தீன் நலன்புரி அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்ஹ் காரி அப்துல் ஜப்பார் (பஹ்ஜி) காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

இந்த கௌரவிப்பு வைபவவம் புதிய காத்தான்குடி முகைதீன் ஜும் ஆப்பள்ளிவாயலில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

unnamed-1காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் செயலாளர் மௌலவி அல்ஹாஜ் எஸ்.எம்.எம்.முஸ்தபாவின் நெறிப்படுத்தலுடன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் காத்தான்குடி காதிநீதிபதி மௌலவி எஸ.எம்.அலியார் பலாஹி, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.எம்.அப்துல் கையூம் சர்க்கி, மௌலவி ஏ.சி.அப்துர் காதர் பலாஹி, மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் பலாஹி உட்பட உலமாக்கள் மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் நிருவாகிகள் கலந்து கொண்டனர்.

unnamed-2சிரீலங்கா கதீப் முஅத்தீன் நலன்புரி அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்ஹ் காரி அப்துல் ஜப்பார் அவர்கள் அன்மையில் கொழும்பு வெல்லம்பிட்டி பிரசேத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்டார். அதற்காக இதன் போது காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தினால் அவருக்கு இரு தொகைப் பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY