ஏறாவூர் இரட்டைக் கொலைச்சம்பவம்: சந்தேக நபர்களை 24 மணித்தியாலங்களுக்கு பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிபதி உத்தரவு

0
5836

(விசேட நிருபர்)

மட்டக்களப்பு ஏறாவூர் இரட்டைக் கொலைச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா பொலிசாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

ஏறாவூர் முகாந்திரம் வீதியை அன்மித்த பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 11.9.2016 அன்று தாயும் மகளும்; கொலை செய்யப்பட்ட சம்பவம் தொர்பில் கடந்த சனிக்கிழமையன்று (17.9.2016 கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் இன்று (19.9.2016 திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்திய பொலிசார் இச்சந்தேக நபர்களை தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டியுள்ளதால் அடுத்த 24 மணித்தியாலயங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிபதியிடம் அனுமதி கோரியதையடுத்து இச்சந்தேக நபர்களை 24 மணித்தியாலயங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிசாருக்கு நீதிபதி அனுமதி வழங்கியதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏறாவூரில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்டவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை நான்குபேர் பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY