பயணிகள் பஸ் குளத்திற்குள் பாய்ந்து 50 பேர் பலி

0
937

இந்தியாவில் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இருந்து 180 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மதுபானியில் சித்தாமர்ஹ் தர்பங்கா நோக்கி ஒரு பஸ் சென்று கொண்டு இருந்தது. அந்த பஸ்சில் 55 பயணிகள் இருந்தனர். மதுபானி அருகே உள்ள சன்குளி துபி கிராமம் அருகே பஸ் சென்று கொண்டு இருந்த போது தனது கட்டுப்பாட்டை இழந்து 25 அடி ஆழம் உள்ள குளத்திற்குள் பாய்ந்தது.

இது குறித்து தகவல் கிடைத்தும் மாவட்ட நிர்வாகம் மீட்பு பணிகளில் தாமதம் காட்டியது. உடனடியாக உள்ளூர் கிராமத்தினர் மீட்பு நடவ்டிக்கையில் ஈடுபட்டனர். இதில் ஒரு பெண் உள்பட 4 பேரில் உடல்கள் மீட்கபட்டது. தொடர்ந்து ஜேசிபி எந்திரங்கள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

முன்னதாக தாமதமாக வந்த போலீசார் மீது ஆம்புலன்ஸ் மீது கிராமத்தினர் கற்களையும் செருப்புகளையும் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

-Daily Thanti-

LEAVE A REPLY