ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் விளாடிமிர் புடினின் கட்சி வெற்றி

0
139

ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய ரஷ்ய கட்சி தீர்க்கமான வெற்றியடைந்திருப்பதன் மூலம் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தன்னுடைய கட்சியின் மீதான அதிகாரத்தை வலுப்படுத்தியுள்ளார்.

புடினுக்கு விஸ்வாசமான நான்கு கட்சிகளும் இந்தத் தேர்தலில் நல்ல வாக்குகள் பெற்றிருந்தன.

ஆனால் இந்த தேர்தலில் இதுவரை நடந்த வாக்குப்பதிவுகளில் மிகவும் குறைவானோரே வாக்களித்திருந்தனர். மோசடிகள் நடந்ததற்கான அறிக்கைகளும் உள்ளன.

ஸ்திரத்தன்மைக்கான தேர்தல் இது என்று அதிபர் புடின் முன்னதாக கூறியிருந்தார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் நான்காவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவார்.

LEAVE A REPLY