(Photo) ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் காணாமல் போயுள்ள நிலையில் தாயும் தந்தையும் தூக்கிட்டு மரணம்

0
539

(வாழைச்சேனை நிருபர்)

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கல்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் நீரில் மூழ்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களது தாயும் தந்தையும் தூக்கிட்டு மரணமடைந்த சோக சம்பவம் இன்று (19.09.2016) அதிகாலை இடம் பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

unnamed-1கல்குடா பட்டியடிச்சேனை கிராம்தை சேர்ந்த சிகை அலங்கார தொழிலாளியான வேலுப்பிள்ளை சன்முகம் மற்றும் அவரது மனைவி கணபதிபிள்ளை யோகலட்சுமி ஆகியோர் தங்களது இரண்டு ஆண்பிள்ளைகளும் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் இன்று (19.09.2016) அதிகாலை தங்களது வீட்டின் நுழைவாயில் கதவுக்கு வெளிப்பக்கமாக பூட்டு போடப்பட்ட நிலையில் வீட்டு முற்றத்தில் உள்ள முந்திரியை மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளனர்.

unnamed-2தூக்கில் தொங்கி மரணமடைந்த வேலுப்பிள்ளை சன்முகம் தம்பதியினரருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளுமாக நான்கு பிள்ளைகள் அதில் ஒரு பெண் பிள்ளை மரணமடைந்துள்ள நிலையில் நான்கு வருடங்களுக்கு முதல் மரணமடைந்துள்ள நிலையில் தங்களது இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரே நேரத்தில் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையிலயே இவர்கள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளனர்.

unnamed-3தூக்கில் தொங்கி மரணமடைந்தவர்கள் வேலுப்பிள்ளை சன்முகம் (வயது – 54) அவரது மனைவி கணபதிபிள்ளை யோகலட்சுமி (வயது – 46) என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பான விசாரனைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று (18.09.2016) மாலை கல்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கிய நிலையில் இருவர் காப்பாற்றப்பட்டதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணனும் தம்பியும் காணாமல் போயுள்ளனர் இவர்களை தேடும் பணியில் கல்குடா பொலிஸ், கடற்படை மற்றும் மீனவர்களும் ஈடுபட்டு வந்த நிலையில் இவர்களின் சடலம் இன்று மதியம் கிடைக்க பெற்றுள்ளது.

unnamed-4

unnamed-7

unnamed

LEAVE A REPLY