கல்குடா கடலில் குளிக்கும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரது சடலங்களும் கண்டெடுப்பு

0
710

(வாழைச்சேனை நிருபர்)

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கல்குடா கடலில் குளிக்கும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்களான இருவரது சடலங்களும் இன்று (19.09.2016) திங்கள்கிழமை மதியம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கல்குடா பட்டியடிச்சேனையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் எஸ்.சதிஸ்குமார் (வயது – 20), மற்றும் தம்பி எஸ். சுரேஸ்குமார் (வயது – 17) இருவரும் நண்பர்களுடன் கல்குடா கடலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் குளிக்கும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த நிலையிலயே கடற்படை, பொலிஸார் மற்றும் மீனவர்களின் உதவியுடன் இன்று (19.09.2016) மதியம் அண்ணனதும் தம்பியினதும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கல்குடா பட்டியடிச்சேனை கிராமத்தை சேர்ந்த சிகை அலங்கார தொழிலாளியான வேலுப்பிள்ளை சன்முகம் மற்றும் அவரது மனைவி கணபதிபிள்ளை யோகலட்சுமி ஆகியோர் தங்களது இரண்டு ஆண்பிள்ளைகளும் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் இன்று (19.09.2016) அதிகாலை தங்களது வீட்டின் நுழைவாயில் கதவுக்கு வெளிப்பக்கமாக பூட்டு போடப்பட்ட நிலையில் வீட்டு முற்றத்தில் உள்ள முந்திரியை மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளனர்.

தூக்கில் தொங்கி மரணமடைந்தவர்கள் சிகை அலங்கார தொழிலாளியான வேலுப்பிள்ளை சன்முகம் (வயது – 54) அவரது மனைவி கணபதிபிள்ளை யோகலட்சுமி (வயது – 46) என்றும் கடலில் மூழ்கி மரணமடைந்தவர்கள் சிகை அலங்கார தொழிலாளியான எஸ்.சதிஸ்குமார் (வயது – 20), மற்றும் கல்குடா நாமகள் வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி கற்கும் எஸ். சுரேஸ்குமார் (வயது – 17) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நால்வரது சடலமும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது இவர்களது இருதிக்கிரிகைகள் நாளை (20.09.2016) பிற்பகல் இடம் பெறும் என்று குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY