சிறையில் ராம்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரணை

0
348

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் என்ஜினீயர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னையை உலுக்கிய இந்த வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ராம்குமார் போலீஸ் விசாரணைக்குப்பின் சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நேற்று மாலை புழல் சிறையில் மின்கம்பியை கடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறி ராயப்பேட்டை மருத்துவமனையில் ராம்குமார் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ராம்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராம்குமார் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ராம்குமார் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி ஏ.டி.ஜி.பிக்கு உத்தரவிட்டுள்ளது.

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை என பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கை மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரிப்பது குறிப்பிடத்தக்கது.

-Malai Malar-

LEAVE A REPLY