புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்ட மகளை கொலை செய்த நபர்

0
427

பிரிட்­டனைச் சேர்ந்த நபர் ஒருவர் 21 மாத வய­தான தனது மகளை பேஸ்போல் மட்­டையால் அடித்துக் கொலை செய்­துள்ளார்.

பொறாமை கார­ண­மா­கவே இக்­கொ­டூரக் கொலையை செய்­த­தா­கவும் ரையன் லோரன்ஸ் எனும் 25 வய­தான நபர் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

இக் ­கு­ழந்­தையின் கண்ணில் புற்­று நோய் ஏற்­பட்­டி­ருந்­தது. எனினும் இக்­ கு­ழந்தை குண­ம­டைந்­த­வுடன் இக் ­கு­ழந்தை பலரின் கவ­னத்­தையும் ஈர்த்­தமை தனக்குப் பொறா­மையை ஏற்­ப­டுத்­தி­ய­தாக அவர் கூறி­யுள்ளார்.

கடந்த பெப்­ர­வரி மாதம் இக் ­கொலை இடம்­பெற்­றது. இக் ­கு­ழந்­தையை தான் பேஸ்போல் மட்­டையால் அடித்துக் கொலை செய்­தபின் அதன் உடலை தீக்­கி­ரை­யாக்­கி­ய­தா­கவும் அவர் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

ரையன் லோரன்­ஸுக்­கான தண்­டனை அடுத்த மாதம் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது. குறைந்த பட்சம் 25 வருட சிறைத் தண்டனையை அவர் எதிர்நோக்குகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

-Metro News-

 

LEAVE A REPLY