அதிகளவு உள்ளுர் 50 ஓவர் போட்டிகளில் வீரர்கள் பங்கேற்க வேண்டும் – மிஸ்பா உல் ஹக்

0
191

அதிகளவு உள்ளுர் 50 ஓவர் போட்டிகளில் வீரர்கள் பங்கேற்க வேண்டுமென பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் உள்ளுர் போட்டிகளில் 50 ஓவர் போட்டிகளுக்கு கூடுதல் சந்தர்ப்பம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் 50 ஓவர் சர்வதேச போட்டிகளில் வீரர்கள் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே பாகிஸ்தான் அணி அண்மைய ஒருநாள் போட்டித் தொடர்பில் தொடர் தோல்விகளை சந்தித்தது என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுரில் சிறந்த ஐம்பது ஓவர் போட்டித் தொடர்கள் நடத்தப்படுவதன் மூலம் வீரர்களின் அனுபவத்தை அதிகரித்து அவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும் என மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரில் பாகிஸ்தான் படுதோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY