(Poem) மர்ஹூம் அஷ்ரப்….!

0
119

(மீராவோடை சுபைர்)

செப்டம்பர் பதினாறு
2000ம் ஆண்டு
மறக்கமுடியுமோ?
அந்த நாளை எங்களால்….!

இது நடந்து
ஆண்டுகள் பதினாறு
அன்றுதான்
எங்கள் கண்களில் குருதியாறு….!

அன்று
இடியாய் வந்திறங்கிய செய்தி
தாங்கமுடியவில்லை எங்களால்
சோகத்தை சுமந்து கொண்டு
நடைப்பிணமாய் நாங்கள்….!

நீங்கள்
மரணித்ததாய்
சொன்னார்கள்
நாங்கள் நம்பவில்லை….!

பொய்யான செய்தி
இது வென்று
எங்கள் மனம் சொல்லிக் கொண்டது
உண்மை என்று
தெரிந்த போது….!

உணர் விழந்து
ஊமையாகிப் போனோம்….!

மரம் நட்ட
மாமனிதரே
நீங்கள் மரணிக்கவில்லை
எங்கள் மனங்களில்….!

உலகம்
உள்ளவரை
உங்கள் நாமத்தை
வரலாறு
எழுதிக் கொண்டேயிருக்கும்….!

முஸ்லிம் சமூகம்
அரசியல் கடலில்
அநாதையாய் தத்தளித்த நேரம்
காப்பாற்றவந்த
கப்பல் நீங்கள்
உங்களை எப்படி மறப்போம்….?

சிம்மக் குரலில்
சிங்கமாய்
கர்ச்சித் தீரே
அல்லாஹு அக்பர் என்று
நாடாளூமன்றத்தில்
அந்த நாளை மறக்க முடியுமா….?

மீராவோடை மண்ணில்
எஸ்.எல்.எம்.ஹனிபாவோடு
வந்திறங்கி
யானைக் கோட்டையை
தகர்த் தெரிந்த
மாவீரன் நீங்கள்
அதை மறக்கமுடியுமா….?

எதையும்
தாங்கும் இதயத்தையும்
எதிர் நீச்சல் போடும் திறணையும்
கற்றுக் கொடுத்த ஆசான் நீங்கள்
அதனால் தான்
தலைமைத்துவம்
இன்றும்
தலை நிமிர்ந்து நிற்கிறது….!

பேராசை பிடித்த
பெருச்சாளிகள்
மர நிழலில்
வந்து குந்திக் கொண்டு
மந்திரி மகுடத்திற்காக
காட்டிக் கொடுத்த
கைங்கரியம்
இவ்வேளை
நீங்கள் இருந்திருந்தால்
எட்டப்பர்களெல்லாம்
தேடுவாரற்று
தெருக்களில்
செல்லாகாசாகி கிடந்திருப்பர்….!

என்ன செய்ய
பொறுமையான
தலைவரை
வாரிசாய் விட்டு சென்று விட்டீர்களே….!

தனிமரமாய்
உருவெடுத்து
தன்மானத்தை
உரமாக்கி
தைரியத்தை
நீராய் பாய்ச்சி
விழுதுகளை
விட்டிறக்கி
விருட்சம் வளர்த்தவர் நீங்கள்….!

நீங்கள்
நட்டது
ஆலமரம்
அடிசாயாது
அதன் நாமம் தேயாது….!

விருட்சம்
வேரோடு சாய்ந்ததென்று
வெட்டி துண்டாட வந்தவர்கள்
விழுதுகளை கண்டு
விரண்டு போனார்கள்….!

கூட இருந்து
குழிபறிக்க வந்தவர்கள்
முகவரி இல்லாமல்
முடங்கிப் போனார்கள்….!

ஒரு சில குள்ளநரிகள்
வாலாட்டிக் கொண்டு
வசை பாடித்திரிகிறது….!

ஏணியாக்கி
ஏறிக் கொண்டவர்கள்
எட்டி உதைத்ததுதான்
வரலாறு….!

எங்களுக்கு
நீங்கள் தந்தது இந்த கட்சி
இதை இழந்தால் ஏது மீட்சி….!

முஸ்லிம் சமூகத்திற்காய்
குரலெழுப்பி
உரிமைக்காய் போராடி
தலை நிமிர்ந்து நின்றவர் நீங்கள்….!

இனவாதத் தீயில்
உங்களை கருகச் செய்தவர்கள்
கண்கள் குருடாகி போகட்டும்
காலில்லாமல்,கையில்லாமல்
முடமாகி
காலமெல்லாம் அழுந்தி சாகட்டும்
எங்கள் சாபம் அவர்களை அழித்தே தீரும்….!

தன்னினத்திற்காய்
தனையீந்த
தலைவரே….!

உங்கள் கபுரை
சுவர்க்கத்தின் பூஞ்சோலையாய்
அல்லாஹ் மாற்றி தரவேண்டும்
என பிராத்திக்கிறேன்….
அல் ஹம்துலில்லாஹ்.

LEAVE A REPLY