தனது மனைவியை பற்றி தெரிவித்தும் அரச அதிகாரிகள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை: கணவன் போராட்டம்

0
343

(அப்துல்சலாம் யாசீம்-)

திருகோணமலை-புல்மோட்டை -அறபா நகர் பகுதியைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அபூபக்கர் முகம்மது ரபீக் தனது மனைவியான அலியார் மைமுனாச்சி என்பவர் இலங்கைக்கு வர முடியாத நிலையில் அவர் விடயமாக பல அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் அரச அதிகாரிகள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனது மனைவியின் விடயமாக நீதி கிடைக்க வேண்டுமென இன்று (19) காலை முதல் போராட்டத்தில் இரண்டு பிள்ளைகளுடன் ஈடுபட்டுள்ளார்.

unnamed-8திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் கடந்த 2011ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு சென்ற தனது மனைவிக்கு இலங்கை வர முடியாமல் கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தார்.

அதனை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கவனம் எடுக்க வேண்டுமெனவும் போலி அடையான அட்டையை பெற்றுக்கொடுத்தும்-முறைகேடான முறையில் எனது மனைவியை சவூதி அரேபியாவிற்கு அனுப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் தனக்கு நீதியை பெற்று தருமாறும் தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY