கல்குடா கடலில் மூழ்கி 2 பிள்ளைகள் காணாமல் போனதையடுத்து பெற்றோர் தற்கொலை

0
401

கல்குடா கடலில் நேற்று குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் நீரில் மூழ்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களது தாயும் தந்தையும் தூக்கிட்டு மரணமடைந்த சோக சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கல்குடா பட்டியடிச்சேனை கிராமத்தைச் சேர்ந்த சிகை அலங்கார ஊழியரான வேலுப்பிள்ளை சன்முகம் மற்றும் அவரது மனைவி கணபதிப்பிள்ளை யோகலட்சுமி ஆகியோர் தங்களது இரண்டு ஆண் பிள்ளைகளும் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் இன்று அதிகாலை தங்களது வீட்டி தற்கொலை செய்துள்ளனர்.

-Metro News-

 

LEAVE A REPLY