காத்தான்குடி மீடியா போரத்தின் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல்

0
200

(எம்.ஐ.அப்துல் நஸார்)

ஊடகவியாலளர்கள் மத்தியில் புரிந்துணர்வையும் பரஸ்பர நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் காத்தான்குடி மீடியா போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் பெருநாள் ஒன்று கூடலும் இராப்போசன விருந்துபசாரமும் கடந்த சனிக்கிழமை (17) இரவு எட்டு மணி தொடக்கம் மறுநாள் அதிகாலை 2.30 மணிவரை காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் அதிதிகளாக கிழக்கு மகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் ULMN முபீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஹஜ் பெருநாள் ஒன்றுகூடலில் காத்தான்குடி மீடியா போரத்தின் நிருவாக சபை உறுப்பினர்கள், பொதுச் சபை உறுப்பினர்கள் மற்றும் காத்தான்குடி மீடியா போரத்தில் அங்கம் வகிக்காத ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

புதிய காத்தான்குடி மெரைன் ட்ரைவ் கடற்கரையில் மும்தாஸ் மதனி வளவில் நடைபெற்ற இந்த நிகழ்வின் இரண்டாம் அமர்வில் காத்தான்குடி கலைஞர்களின் கலை நிகழ்வுகளும், வேடிக்கை விநோத விளையாட்டுக்களும் இடம் பெற்றன.

நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கிய அனுசரணையாளர்கள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

img-20160917-wa0049 img-20160917-wa0051 img-20160917-wa0052 img-20160917-wa0053 img-20160917-wa0054 img-20160917-wa0055 img-20160917-wa0061

LEAVE A REPLY