கையடக்க தொலைபேசியில் ஆபாச படம் பார்த்த மீனவர் கைது

0
386

(அப்துல் சலாம் யாசீம்)

புல்மோட்டை-ஜின்னாபுரம் கலப்புப்பகுதியில் கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை வைத்திருந்து பார்வையிட்டுக் கொண்டிருந்த மீனவரொருவரை நேற்றிரவு (18) கைது செய்துள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மீகமுவ-கலாஹேன பிரதேசத்தைச்சேர்ந்த டி.பீ.ஏ.பெர்ணாண்டோ (37 வயது) எனவும் பொலிஸார் ரெிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரை பொலிஸ் பிணையில் விடுவித்ததாகவும் எதிர்வரும் 21ம் திகதி குச்சவௌி சுற்றுலா நீதிமன்றத்திற்கு வருமாறும் புல்மோட்டை பொலிஸார் உத்தரவிட்டனர்.

இதேவேளை புல்மோட்டை-ஜின்னாபுரம் பகுதியில் மக்கள் நடமாட்டம் கூடிய ஹோட்டலொன்றில் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட புல்மோட்டை-04ம் வட்டாரம்-பிலால் நகரைச் சேர்ந்த அப்துல் ரஸாக் இம்சால் (38 வயது) என்பவரையும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ள நிலையில் எதிர்வரும் 21ம் திகதி நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறும் புல்மோட்டை பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY