திருகோணமலை கந்தளாய் அல்ஜாயாவின் விளையாட்டு விழா

0
259

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை கந்தளாய் அல் ஜாயா விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டு விழா நேற்று சனிக்கிழமை (17) மாலையில் விழா ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் ஏ.சி.எம்.ஜவாஹிர் தலைமையில் அல் தாரீக் விளையாட்டு மைதானத்தில் வெகுவிமர்சையாக நடாத்தப்பட்டது.

இவ்விளையாட்டு விழாவில் வழுக்குமரம் ஏறுதல்,வெச்சிக்க வெச்சிக்க பூமா,சைக்கிள் சவாரி,ஐம்பது வயதுக்கு மேற்பட்டோருக்கான சூப்பியில் பானம் அறுந்துதல்,கயிறு இழுத்தல் சிறுவர்களுக்கான வழுன் சேகரித்தல் மற்றும் இரவு நேர களை நிகழ்சிகளாக நாடகம், கஸீதா,பாடல் ,வில்லுப்பாட்டும் அரங்கேற்றப்பட்டது.போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவானும், கந்தளாய் முன்னால் பிரதேச சபை உறுப்பினருமான எம்.எஸ்.மதார்,மற்றும் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள்,அரசஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY