சுவாதி கொலை விவகாரம்: சிறையில் ராம்குமார் தற்கொலை; கொலையில் சந்தேகம் என்கிறார் தந்தை

0
708

இந்தியா புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார். முதலில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார் என பொலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டை சேர்ந்த மென் பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஈடுபட்டது யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர்.

கொலை பல நாட்களாக மர்மாக இருந்து வந்தது. தொடர்ந்து அமைக்கப்பட்ட பல்வேறு போலீஸ் படையினர் கொலையாளி ராம்குமார் என்பதை கண்டுபிடித்தனர். இவர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் பதுங்கி இருந்தார்.அங்கு அவரை போலீசார் கைது செய்தனர்.

அவரது வீட்டில் இருந்த ராம்குமார் கைது செய்யப்படும் போது, தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்குமார் தந்தை பேட்டி

இந்த சம்பவம் தொடர்பாக ராம்குமாரின் தந்தை பரமசிவன் அளித்த பேட்டியில்,

தனது மகன் ராம்குமார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இறந்து விட்டதாக கூறுகின்றனர். இவரது சாவில் மர்மம் உள்ளது. போலீசார் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சிறைத்துறை விளக்கம்

ராம்குமாரின் தற்கொலை தொடர்பாக சிறைத் துறை வட்டாரங்கள் கூறியதாவது,

ராம்குமார் மாலை 4.45 மணிக்கு தற்கொலைக்கு முயன்றார். சிறை சமையல் அறையில் இருந்த மின்கம்பியை வாயால் கடித்துள்ளார். மின் வயரை உடலிலும் செலுத்தியுள்ளார். இதை அறிந்ததும், ராம்குமாருக்கு சிறையில் முதலுதவி அளிக்கப்பட்டது. ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

திட்டமிட்ட கொலை: ராம்குமார் தந்தை புகார்

ராம்குமாரின் தந்தை கூறுகையில்,

“என்னுடைய மகன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது. அவன் கொலையாளி அல்ல. அவன் உயிரோடிருந்தால் உண்மை எப்படியாவது வெளியில் வந்துவிடும் என்று பயந்து பொலீசார் திட்டமிட்டு என் மகனை கொலை செய்துள்ளனர் ” என்றார்.

LEAVE A REPLY