புசல்லாவையில் சந்தேக கைதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

0
201

Hangingபுசல்லாவை ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிசந்திரன் (28) என்ற இளைஞன் புசல்லாவை பொலிஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் புசல்லாவை வகுகவ்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இறந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது. குறித்த நபர் குற்றச் செயல் ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டு, வழக்கு தாக்கல் செய்யபட்டு நீதிமன்றுக்கு அழைக்கபட்டிருந்தார். அவ்வழக்கிற்கு குறித்த நேரத்திற்கு சமூகம் தராததால், நீதிமன்றினால் பிடி ஆணை பிறப்பிக்கபட்டிருந்தது.

அதன் படி, நேற்று (17) இரவு 7.30 மணியளவில் புசல்லாவை பொலிஸாரினால் புசல்லாவை நகரத்தில் வைத்து பொலிஸாரினால் அவர் கைது செய்யபட்டுள்ளார்.

கைது செய்யபட்ட, நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் வரை புசல்லாவை பொலிஸ் பாதுகாப்பில் வைத்திருந்த வேளையில் சந்தேக நபர் தனது ரீசேட்டை பயன்படுத்தி சிறை கதவு கம்பின் ழூலம் தூக்கில் தொங்கியுள்ளதாக புசல்லாவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனை அடுத்து, அவரை உடனடியாக புசல்லாவை வகுகவ்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்போது அவர், வழியில் வைத்து இறந்துள்ளதாக வைத்தியசாலையால் உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பம் தொடர்பில் அப்பகுதி மக்கள் பதட்டம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Source: Thinakaran

LEAVE A REPLY