இன்று அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி

0
169

president-maithripala-sirisenaஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (18) ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா பயணமாகவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட குழுவினரும் செல்கின்றனர்.

எதிர்வரும் 21ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபை கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY