மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் ஒருவருக்கு மூன்று குற்றச்சாட்டுகளுக்கு பன்னிரன்டாயிரம் தண்டப்பணம்

0
193

(அப்துல்சலாம் யாசீம்)

lanka-money salary rupeesதிருகோணமலை- மூதூரில் சாராயம் குடித்துவிட்டு அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் ஒருவருக்கு மூன்று குற்றச்சாட்டுகளுக்கு பன்னிரன்டாயிரம் தண்டப்பணம் விதித்து மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவிட்டார்.

கிண்ணியா-பைசல்நகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் சாராயம் குடித்து விட்டு மோட்டார் சைக்கிள் செலுத்தியமைக்கு ஐந்தாயிரம் ரூபாய் தண்டப்பணமும்இஅனுமதிப்பத்திரம்இதலைக்கவசம் இன்றி சென்றமைக்காக ஆராயிரம் ரூபாவும்இபோக்குவரத்து சட்டத்தினை மீறி செயற்பட்டமைக்காக ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.

குறித்த நபர் மூதூர் பிரதேசத்தில் வியாழக்கிழமை (15) மோட்டார் சைக்கிள் செலுத்திய போதே போக்குவரத்து பொலிஸார் கைது செய்து நேற்று வெள்ளிக்கிழமை(16) மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY