பெண்னொருவர் மயக்க முற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு

0
240

(அப்துல்சலாம் யாசீம்)

death-bodyதிருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட இருதயபுரம் பகுதியில் பெண்ணொருவர் மயக்க முற்ற நிலையில் வீட்டினுள் கிடந்ததையடுத்து அயலவர்களின் உதவியினால் மூதூர் தள வைத்தியசாலையில் இன்று (17) காலை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்த பெண் அதே இடத்தைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான அரியநாயகம் வனிதாதேவி (32 வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த பெண்ணைக்கான வில்லையென வீட்டுக்கு சென்ற அயலவர்கள் மயக்க முற்ற நிலையில் கிடப்பதை அவதானித்தனர்.

அதனையடுத்து அவரை மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்கப்ட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் ஏதாவது நஞ்சு வகைகளை உட்கொண்டிருக்கலாம் என வைத்தியசாலை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்குறிய நடவடிக்கைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY