திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

0
40

(அப்துல்சலாம் யாசீம்)

accident-logoதிருகோணமலை மாவட்டத்தில் நான்கு பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற விபத்துக்களில் ஒன்பது பேர் நேற்றிரவு (16) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொறவெவ பொலிஸ் பிரிவுக்குற்பட்ட திருகோணமலை-புத்தளம் பிரதான வீதி 10ம் கட்டை பகுதியில் முற்சக்கர வண்டியுடன் எருமை மாடு மோதியதில் முற்சக்கர வண்டி குடை சாய்ந்ததில் முற்சக்கர வண்டி சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த திருகோணமலை-நகரசபை விடுதி-காந்திநகர் பகுதியைச்சேர்ந்த வீ.கோடிஸ்வரன் (38வயது) மற்றும் சிறிஸ் கந்தராஜா (45வயது) படுகாயமடைந்தனர்.

இதேவேளை சேறுநுவர பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது பின்புறமாக சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைது செய்துள்ளதுடன் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

மாவடிச்சேனை-கல்லடி பகுதியைச்சேர்ந்த டி மதியலகன் (38வயது) மற்றும் ஈச்சிலம்பற்று-இலங்கைத்துறை பகுதியைச்சேர்ந்த டி.நிரோஷன் (24வயது) ஆகியோரே படுகாயமடைந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் புல்மோட்டை பகுதியில் துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த புல்போட்டை-03ம் வட்டாரத்தைச்சேர்ந்த முகம்மது ஹனீபா (58வயது) மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த அதே இடத்தைச்சேர்ந்த எஸ்.தமீம் (26வயது) ஆர்.நிலூபர் (30வயது) ஆகியோரும் காயமடைந்தனர் இவ்விபத்து தொடர்பாக புல்மோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிவுளக்கட பகுதியில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் கணவனும் மனைவியும் படுகாயமடைந்த நிலையில் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து திருகோணமலை பொது வைத்தியசாவைக்கு இடமாற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர்கள் கோமரங்கடவெல-பக்மீகம பகுதியைச்சேர்ந்த ஜகத் (39வயது) மனைவியான எஸ்.சிரியானி (36வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்துக்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY