சிரேஷ்ட ஊடகவியலாளர் ஹலால்தீன் தேசிய ரீதியான கட்டுரைப் போட்டியில் வெற்றி

0
77

unnamed-4இலங்கை- சீன சமூக,கலாசார ஒத்துழைப்புக்கான சங்கம், இலங்கையிலுள்ள மக்கள் சீனக்குடியரசின் தூதரகம், வெளிநாடுகளுடன் நட்புறவுக்கான சீன மக்கள் சங்கம்(CPAFFC), வெளிநாடுகளுடன் நட்புறவுக்கான பீஜிங் மக்கள் சங்கம் (PAFFC), வெளிநாடுகளுடன் நட்புறவுக்கான குவாந்தோங் மக்கள் சங்கம் (GPAFFC)ஆகியன இணைந்து தேசியரீதியில் நடத்திய கட்டுரைப் போட்யில் ஊடகவியலாளரும், ஆசிரியர் ஆலோசகருமான எச். எம்.ஹலால்தீன் வெற்றி பெற்றுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டு ‘கடல் பட்டுப்பாதை’கட்டுரைப் போட்டியிலேயே இவர், வெற்றி பெற்றுள்ளார். இவருக்கான 15.000 ரூபாப் பணப்பரிசும், வெற்றிச் சான்றிதழும், புத்தகங்களும் கொழும்பு-7 இல், அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் கேட்போர் கூடத்தில் இலங்கை- சீன சமூக,கலாசார ஒத்துழைப்புக்கான சங்கத்தின் தலைவரினால் வழங்கப்படுவதையும் படங்களில் காணலாம். இவருக்கு திருகோணமலை ஊடகவியலாளர் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது

LEAVE A REPLY