பாலமுனை பிரதேசத்தில் காணாமல் போன வயோதிபப் பெண் நீரோடையில் சடலமாக மீட்பு

0
123

(விசேட நிருபர்)

death-bodyமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் நேற்று(16.9.2016) வெள்ளிக்கிழமை பிற்பகள் காணாமல் போன வயோதிபப் பெண் நேற்று மாலை பாலமுனை நீரோடையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

பாலமுனை அஷ்ரப் வீதியைச் சேர்ந்த இப்றாலெவ்வை சபிய்யா உம்மா (69) எனும் வயோதிப் பெண் நேற்று(16.9.2016) வெள்ளிக்கிழமை பிற்பகள் காணாமல் போயுள்ளார்.

பின்னர் அவரை தேடி வந்த நிலையில் பாலமுனை கீரித்தோனா எனப்படும் நீரோடையிலிருந்து நேற்று(16.9.2016) வெள்ளிக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நீரோடையில் சடலமொன்று கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் சடலத்தை மீட்டபோது பாலமுனை அஷ்ரப் வீதியைச் சேர்ந்த இப்றாலெவ்வை சபிய்யா உம்மாவின் சடலமென அடையாளம் கண்டனர்.

இவர் ஒரு புத்திசுவாதீனமற்றவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY