காத்தான்குடி பிரதேச செயலகம் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடம்

0
353

(விஷேட நிருபர்)

ds-office-kattankudyஉற்பத்தி திறன் செயலகம் அகில இலங்கை ரீதியாக 2015ம் ஆண்டுக்காக நடாத்திய உற்பத்தி திறன் போட்டியில் பிரதேச செயலகங்களுக்குள் காத்தான்குடி பிரதேச செயலகம் அகில இலங்கை ரீதியில் 3மிடத்தை பெற்றுள்ளது.போட்டி முடிவுகள் இன்று(16.9.2016) வெளிவந்த நிலையில் காத்தான்குடி பிரதேச செயலகம் அகில இலங்கை ரீதியில் 3மிடத்தை பெற்றுள்ளது.

கடந்த மாதம் இந்தப் போட்டி நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேச செயலகங்கள் இந்தப் போட்டியில் பங்கு பற்றின.

போட்டி நடுவர்கள் கடந்த மாதம் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து காத்தான்குடி பிரதேச செயலகத்தின் உற்பத்தி திறன் குறித்து பல்வேறு பரிசீலனைகளை மேற் கொண்டனர்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எச்.முசம்மில் அவர்களின் ஆலோசனையின் பேரிலும் வழிநடாத்தலிலும் இந்தப் போட்டிக்காக காத்தான்குடி பிரதேச செயலகம் விண்ணப்பித்து போட்டியை எதிர் கொண்டது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எச்.முசம்மில் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் உட்பட காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பல் வேறு மட்ட உத்தியோகத்தர்களும் இதற்காக உழைத்ததுடன் தியாகத்துடன் செயற்பட்டனர்.

2014ம் ஆண்டுக்கான போட்டியிலும் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு விஷேட விருது கிடைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் உற்பத்தி திறன் போட்டியில் காத்தான்குடி பிரதேச செயலகம் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடத்தைப் பெற்றமைக்காக எமது செய்தி இணையதளமும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

LEAVE A REPLY