இத்தாலி முன்னாள் அதிபர் கார்லோ அசுக்லியோ சியாம்பி மரணம்

0
148

201609161744436938_former-italian-president-prime-minister-ciampi-dies_secvpf1920-ம் ஆண்டில் இத்தாலியில் பிறந்த சியாம்பி 1946-ம் ஆண்டில் வங்கி ஊழியராக தனது வாழ்வைத் துவங்கினார். இத்தாலி நாட்டின் 49-வது பிரதமராக 1993-1994 வரை பதவி வகித்தார். இதன்மூலம் பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் இத்தாலி பிரதமர் பதவியை அலங்கரித்தார் என்னும் பெருமை இவருக்குக் கிடைத்தது.

இத்தாலியின் 1௦-வது குடியரசுத்தலைவராக 1999 முதல் 2006-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். இதுதவிர இத்தாலியின் மத்திய வங்கி ஆளுநராகவும் பதவி வகித்தார். ஐரோப்பாவின் ஒற்றை நாணய முறையை அறிமுகப்படுத்தியதில் சியாம்பிக்கு முக்கிய பங்குண்டு.

தனது வாழ்நாளில் ஏராளமான பதவிகளையும், பட்டங்களையும் அலங்கரித்த சியாம்பி உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். இதனை அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

”இத்தாலி நாட்டின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர்” என சியாம்பியின் மரணத்துக்கு இத்தாலி பிரதமர் மட்டோ ரென்சி இரங்கல் தெரிவித்துள்ளார்.

-Malai Malar-

LEAVE A REPLY