முழு அடைப்பு போராட்டம்: தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் கைது

0
34

201609162000384699_30000-people-arrested-during-shut-down-across-tamil-nadu_secvpfகர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாட்டில் இன்று விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., காங்கிரஸ், த.மா,கா. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன. விடுதலை சிறுத்தைகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு கட்சியிலும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இப்போராட்டம் இன்று மாலை 6 மணியளவில் நிறைவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்ட 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் 7100 பேர் கைது செய்யப்பட்டதாகவும், முழு அடைப்பு அமைதியாக நடந்து முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY