(Poem) அனிமல் பிளனட் (Animal Planet)

0
94

(Mohamed Nizous)

மாச கிளினிக் போகாமலே
மான்கள் குட்டி போடும்.

ஒடிக்லோன் பூசா கால்களால்
ஓடி ஆடி விளையாடும்.

கொலஸ்ட்ரோல் பயமின்றி
கொன்று தின்னும் புலி.

ஊக்க மருந்தின்றி
தீக்கோழி விரைந்தோடும்

கூகிள் மெப்பின்றி
கூடத்தூரம் சென்று பின்
கூடு திரும்பும் குருவி

ஓட்டோ கெட் இல்லாது
கூட்டைக் கட்டி வாழும் தூக்கனாங் குருவி

வட்ஸ் அப் துணை இன்றி
வாயால் குறூப் மெஸேஜை
ஓயாமல் அனுப்பும் காக்கை

பம்பாய் பாட்ஷாவாய்
பயங்காட்டி ஆளும் சிங்கம்

எக்ஸ்ட்ரா ஸூம் பண்ணி
இலக்கைத் தாக்கும் கழுகு

அரசியல் வாதிகள் போல்
அத்தனையும் விழுங்கி விட்டு
அமைதியாய் படுத்திருக்கும் அனகொண்டா

மேக்கப் இன்றியே
பார்க்க அழகாய்
மயில்கள் ஆடும்.

இந்த
இலக்ட்ரோனிக் யுகம் நீங்கி
இயற்கையின் சுகம் காண
இடைக்கிடை
ஏங்கும் மனம்….!

LEAVE A REPLY