கிழக்கின் எழுச்சி விவசாய கண்காட்சி ஆரம்பமானது

0
196

(ஹஸ்பர் ஏ. ஹலீம்)

20160916_090808கிழக்கு மாகாண விவசாய கால் நடை அமைச்சின் அனுசரனையில் கிழக்கின் எழுச்சி விவசாயம், மீன் பிடி, கால் நடை, நீர்ப்பாசனம், கூட்டுறவு கண்காட்சியும் விற்பனையும் இன்று (16) தி/சம்புர் மகா வித்தியாலயத்தில் எதிர் கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய இரா.சம்பந்தனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக நாளையும் நாளை மறுதினமும் இக்கண்காட்சி இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கண்காட்சியில் வடமாகாண சபை சுகாதார அமைச்சர் கலாநிதி சத்தியலிங்கம், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துறைராஜசிங்கம், மாகாண வீதி காணி அமைச்சர் ஆரிய கலபதி, முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் துறைரட்ன சிங்கம், மாகாண விவசாய பணிப்பாளர் உட்பட ஏனைய அதிகாரிகளும் பங்கு பற்றினர்.

20160916_091731

LEAVE A REPLY