கல்ஹின்னவில் முஸ்லிம், சிங்கள குழுக்களுக்கிடையே மோதல்: OIC உட்பட நால்வர் காயம்: ஐவர் கைது

0
99

கண்டி – அங்கும்புர – கல்ஹின்ன பிரதேசத்தில் இரண்டு குழுக்கல் இடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் மூவர் காயமடைந்துள்ளனர்.

வர்த்தக நிலையமொன்றில் நேற்று(14) இரவு இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தை சமரசப்படுத்த சென்ற அங்கும்புர பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி உட்பட நான்கு பேர் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருபவர்களில் மூவர் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது:

நேற்று இரவு அன்கும்புர பிரதேசத்தை சேர்ந்த சிங்கள வாலிபர் குழு ஒன்று மதுபோதையில் கல்ஹின்னை பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றிக்கு சென்று சிகரெட் கேட்டு பிரச்சினைப் படுத்தியுள்ளனர். அத்துடன் அங்கிருந்த முஸ்லிம்களுக்கு தூசன வார்த்தைகளால் திட்டியும் உள்ளனர்.

அவ்விடத்திற்கு வந்துள்ள கல்ஹின்னை பிரதேச சபை உறுப்பினர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு வினயனாம கேட்டபோதும் அவர்கள் அவரையும் தாக்கியுள்ளனர். இதன் போது அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி குறித்த பெரும்பான்மை குழுவுக்கும் அங்கிருந்த முஸ்லிம் வாலிபர்களுக்கும் இடையே கைகலப்பு இடம்பெற்றது.

இதனை தொடந்து ஸ்தலத்துக்கு விரைந்த அங்கும்புர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் பெரும்பான்மை குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்ஹின்னை பிரதேசத்தில் பாதுகாப்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

-Enkal Teasam-

LEAVE A REPLY