கல்ஹின்னையில் பள்ளிவாயல் மீது கல்வீச்சு!

0
137

img-20160915-wa0059கண்டி – அங்கும்புர – கல்ஹின்ன பிரதேசத்தில் பெபிலி கொல்லை தக்கியா பள்ளிவாயல் மீதும் வீடு ஒன்றின் மீதும் இன்று(15) இரவு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கல்வீச்சு தாக்குதலை நடத்திய மூவர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

தானும் லாபிர் ஹாஜியாரும் குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் ஹிதயாத் சத்தார் எமது எங்கள் தேசம் இணையதளத்திற்கு தெரிவித்தார். கண்டி பிரதி பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டு பாதுகாப்பு எற்பாடுகள் தொடர்பில் பேசியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

-Enkal Teasam-

LEAVE A REPLY