சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: முறைப்படி அறிவிக்கிறார் ராம்நரேஷ் சர்வான்

0
89

201609151712098373_sarwan-set-to-retire-from-international-cricket_secvpfவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் சர்வான் (வயது 36). இவர் கடந்த 2000-ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மொத்தம் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15 சதங்களுடன் 5842 ரன்கள் சேர்த்துள்ளார். 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5 சதங்களுடன் 5804 ரன்களும், 18 டி20 போட்டிகளில் விளையாடி 298 ரன்களும் சேர்த்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடைசியாக 2013-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக விளையாடினார். அதன்பின் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். ஆனால், தனது ஓய்வு குறித்து எந்தவித முடிவையும் எடுக்காமல் இருந்தார். இந்நிலையில் கயானாவில் இன்று தனது ஓய்வை முறைப்படி அறிவிக்கிறார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆன்டிகுவாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் 418 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி சேஸிங் செய்தபோது 5-வது நபராக களம் இறங்கி 105 ரன்கள் குவித்து உறுதுணையாக இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் மிகச்சிறந்த சேஸிங்காக இருந்து வருகிறது.

2009-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக பார்படோசில் நடைபெற்ற டெஸ்டில் அதிகபட்சமாக 291 ரன்கள் குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.

-MM-

LEAVE A REPLY