தொழில்நுட்ப கோளாறு: 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

0
97

201609151929359089_copter-with-eight-on-board-make-emergency-landing-in-assam_secvpfஸ்கைஒன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்ஐ-172 ரக ஹெலிகாப்டர் ஒன்று கவுகாத்தியில் இருந்து இடாநகருக்கு இன்று காலை 10.30 மணியளவில் புறப்பட்டு சென்றது. நிறுவன ஊழியர்கள் உட்பட மொத்தம் எட்டு பேர் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.

புறப்பட்ட சற்று நேரத்தில் ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அசாம் மாநிலத்தின் நகோன் மாவட்டம் அருகே அந்த ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறக்கபட்டது.

இதுகுறித்து மாவட்ட சிவில் நிர்வாக போக்குவரத்து அதிகாரி சாகப் கூறுகையில் ”ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரு பயணிகளுக்கும் நகோன் மாவட்ட நிர்வாகம் சார்பாக இடாநகர் வரை செல்ல வாகன வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய கவுகாத்தியில் இருந்து தொழில்நுட்பக் குழு வந்து கொண்டிருக்கிறது” என்றார்.

-Malai Malar-

LEAVE A REPLY