எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திய எறாவூர் இரட்டைப்படுகொலை தொடர்பில் காத்தான்குடி சமூக குழுமத்தின் ஆழ்ந்த அனுதாபங்களும் கண்டனங்களும்

0
261

unnamedகடந்த 11.09.2016ம் திகதி ஏறாவூர் முகாந்திரம் வீதியிலுள்ள தனது வீட்டில் வைத்து 56வயதான என்.எம் சித்தி உசைறா, மற்றும் அவரது மகளான திருமணமான 32வயதான ஜெஸீரா பானு ஆகிய இருவரும் மிலேச்சதனமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து ஏறாவூர் சமூகம் கண்ணீருடனும், கவலையுடனும் அச்சத்துடனும் நாட்களை கடத்துகின்றது.

புனித அரபா தினமன்று அன்று அதிகாலையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான இப்படுகொலை தொடர்பில் காத்தான்குடி மக்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும், கவலையையும் பகிர்ந்து கொள்கிரார்கள்.

அத்துடன் இந்த மிலேச்சத்தனமான படுகொலையை செய்த கொலையாளியை அல்லது கொலையாளிகளை கண்டுபிடிக்க ஏறாவூர் மக்கள் எந்த வித தயக்கமும் இன்றி முன்வருவதுடன், அதற்காக பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பை ஏறாவூர் சமூகம் வழங்கி கொலையாளியை கண்டு பிடிப்பதுடன் கொலையளிக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என காத்தான்குடி சமூக குழுமம் வேண்டிக்கொள்கிறது அத்துடன் அதற்கான பூரண ஒத்துழைப்பினையும் காத்தான்குடி சமுகம் குழுமம் வழங்க உள்ளது

அத்துடன் இதில் படுகொலை செய்யப்பட்ட சித்திஉஸைரா, ஜெஸீராபானு ஆகிய இருவருக்கு ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் சுவன கிடைக்கப் பெற வேண்டும் என காத்தான்குடி சமூகம் பிரார்த்திக்கின்றது

LEAVE A REPLY