பாகிஸ்தானில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி-150 பேர் காயம்

0
96

201609151029072386_at-least-6-dead-150-injured-in-pakistan-train-crash_secvpfபாகிஸ்தானில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்கள் அரசு விடுறை விடப்பட்டிருந்தால் நகர்ப்புறங்களில் வேலை பார்த்த பலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். விடுமுறை முடிந்து நேற்று அவர்கள் பணிக்கு திரும்பியதால் அனைத்து ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில், கராச்சி நகருக்கு சென்றுகொண்டிருந்த பயணிகள் ரெயில் முல்தான் அருகே இன்று அதிகாலையில் சரக்கு ரெயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் மீது சரக்கு ரெயில் மோதி இறந்ததையடுத்து சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போதுதான் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு ஒன்றன் மீது ஒன்று விழுந்தன.

தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டதும் சிவப்பு சிக்னல் போடப்பட்டிருந்தது. பயணிகள் ரெயில் டிரைவர் சிக்னலை சரியாக கவனிக்காமல் சென்றதால் இவ்விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.

-Malai Malar-

LEAVE A REPLY