அதிகாலையில் அந்தமானில் நிலநடுக்கம்

0
141

201609151053067312_earthquake-of-magnitude-51-hits-andaman-islands_secvpfஅந்தமானில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர்.

அந்தமான்- நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5 ஆக பதிவானதாக டெல்லியில் உள்ள புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட போது அதிகாலையில் மக்கள் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது வீடுகளில் அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் தூக்கத்தில் இருந்து விழித்து வெளியே ஓடினார்கள்.

இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Malai Malar–

LEAVE A REPLY