இந்தோனேஷியாவில் படகு விபத்து: சுற்றுலா பயணிகள் இருவர் பலி

0
92

201609151408041697_indonesia-ferry-blast-kills-two-injures-13_secvpfஇந்தோனேஷியாவின் பாலி மற்றும் லம்பாக் பகுதிகளுக்கு இடையில் 35 சுற்றுலா பயணிகளுடன் பயணித்த படகு இன்று விபத்துக்குள்ளானது. இதில் இந்தோனேஷியா மற்றும் நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து பாலி போலீஸ் அதிகாரி மாடே சுடனா கூறுகையில், ”படகில் ஓட்டை விழுந்ததால் இன்ஜினை வேகமாக இயக்கியபோது இந்த விபத்து ஏற்பட்டது” என தெரிவித்தார்.விபத்தில் சிக்கிய படகில் ஆஸ்திரேலியா, ஜெர்மன், கொரியா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பயணித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாலி, லம்பாக் இரண்டு தீவுகளும் இந்தோனேஷியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தளங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-Malai Malar-

LEAVE A REPLY