ஏறாவூர் இரட்டைக் கொலைச்சம்பவத்தின் சூத்திரதாரிகளை கண்டு பிடித்து அவர்களை கைது செய்வோம்: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

0
407

unnamed-7(விசேட நிருபர்)

ஏறாவூர் இரட்டைக் கொலைச்சம்பவத்தின் சூத்திரதாரிகளை கண்டு பிடித்து அவர்களை கைது செய்வோம் என மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் யு.ஏ.பி.கே.பி.கருணாநாயக்க தெரிவித்தார்.

ஏறாவூர் அறபா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

(14.9.2016) புதன்கிழமை மாலை நடைபெற்ற இந்த சந்திப்பில் ஏறாவூரிலுள்ள பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கிராம உத்தியோகத்தர் இளைஞர் கழக உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏறாவூர் இரட்டைக் கொலைச்சம்பவம் தொடர்பில் துரிதமான விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. கொலையாளிகளை கண்டு பிடிப்பதற்காக நாம் நூறு வீதம் நெருங்கி விட்டோம்.

unnamed-8பொது மக்களாகிய நீங்கள் பொலிசாருக்கு உதவியாக இருங்கள் உங்களுக்கு இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் ஏதாவது தெரியுமாயின் பொலிசாரை நேரடியாக தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். அல்லது எழுத்து மூலம் தெரிவிக்கலாம்.

இந்தக் கொலைச்சம்வத்தின் சூத்திரதாரிகள் தொடர்பில் துரிதமான விசாரணைகளை பொலிசார் துரிதமாக மேற் கொண்டுவருகின்றனர்.

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட பொலிசாருக்கு பொது மக்கள் உதவியாக இருக்க வேண்டும் நீங்கள் யாரும் அச்சப்படத்தேவையில்லை. என்றார்;.

இதன் போது பொது மக்களும் தமது சந்தேகங்களை பொலிஸ் அதிகாரிகளிடம் கேட்டறிநந்து கொண்டனர்.

இதில்; உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY