ஏறாவூர் இரட்டைக் கொலை; நெருங்கிய உறவினர் கைது

0
786

(விசேட நிருபர்)

Eravur Arrestமட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை இன்று வியாழக்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவரையே கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்

ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதியை அண்டியுள்ள வீடொன்றில் தாயான நூர்முஹம்மது ஹ{ஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பாணுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) மீட்கப்பட்டன.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் துரிதமாக விசாரணை செய்து வரும் பொலிசார் சிலரிடம் வாக்கு மூலங்களை பெற்;றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY