அறபிக் கலாசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களும் புனித உம்றா கடமையினை நிறைவேற்ற ஹிறா பௌண்டேசன் ஏற்பாடு

0
236

(ஏ.எல். டீன்பைரூஸ்)

Hizbullah MA MPஅறபிக் கலாசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் குறிப்பாக 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதுவரை புனித உம்றா கடமையினை நிறைவேற்றாதவர்களை நாடு பூராகவுமிருந்து தெரிவு செய்து அனுப்ப ஹிறா பௌண்டேசன் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

பள்ளிவாயல்களில் நீண்ட காலம் கடமையாற்றி வரும் இமாம்கள், முஅத்தீன்கள் என 500 பேரை புனித உம்றாவுக்கு அனுப்பும் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 300 பேர் புனித உம்றா கடமையினை நிறைவேற்றியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் குறிப்பாக குக்கிராமங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட மிகவும் தகுதியான 300 இமாம்கள், முஅத்தீன்கள் புனித மக்கா சென்று தனது உம்றா கடமையினை மிகவும் சிறப்பாக நிறைவேற்றியது மாத்திரமின்றி அங்குள்ள மிக முக்கியமான இடங்களையும் பார்வையிட்டதுடன் சவுதி அரேபியாவிலுள்ள நிறுவணங்கள், மக்காவினுடைய இமாம்கள், பல உலமாக்களுடனான சந்திப்புக்களையும் மேற்கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

புனித ரமழான் கால விடுமுறையில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் ஹஜ் காலம் என்பதால் உம்றா செல்ல தாமதமான இமாம்கள், முஅத்தீன்களில் தகுதியான 100 பேருடைய விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றது. அவர்களும் மிக விரைவில் புனித உம்றாவுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இதன் அடுத்த கட்ட பணியாக அரபு மதரசாக்களில் கற்பிக்கும் 55 வயதுக்கு மேற்பட்ட மௌலவி ஆசிரியர்கள் இதுவரை உம்றா செல்லாதவர்கள் 200 பேர் தெரிவு செய்யப்பட்டு 45 நாட்களுக்குள் ஹிறா பௌண்டேசன் ஊடாக புனித உம்றாவுக்கு அனுப்பப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

தகுதியானவர்கள் கீழ்கானும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்துமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

தொடர்பு:
065-2055355
வேளை நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 03.30 மணிவரை

LEAVE A REPLY