மேலதிக கோட்டா குறித்து மக்களுக்கு உறுதியளித்த ஹஜ் முகவர்களுக்கு எதிராக நடவடிக்கை: பாதிக்கப்பட்டோரை முறையிடுமாறு ஹஜ் குழு வேண்டுகோள்

0
210

Hajj masjid al haram 4இலங்­கைக்கு கிடைக்கும் மேல­திக ஹஜ் கோட்­டாவின் மூலம் ஹஜ் ஏற்­பா­டு­களைச் செய்­வ­தாக உறு­தி­ய­ளித்து மக்­க­ளி­ட­மி­ருந்து முற்­பணம் பெற்­றுக்­கொண்­டுள்ள ஹஜ் முக­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெ­னவும் அவ்­வாறு பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தமது முறைப்­பா­டு­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்க வேண்­டு­மெ­னவும் அரச ஹஜ் குழு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

அரச ஹஜ் குழுவின் உறுப்­பினர் மெள­லவி எம்.எஸ்.எம்.தாஸிம் இவ்­வேண்­டு­கோளை முன்­வைத்­துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கடமை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கையில், இலங்­கை­யி­லி­ருந்து இவ்­வ­ருடம் ஹஜ் பயணம் மேற்­கொண்ட யாத்­தி­ரி­கர்கள் அனை­வரும் நல­மாக இருக்­கின்­றனர்.

அவர்கள் தங்­கி­யி­ருக்கும் இடங்­க­ளுக்கு தற்­போது ஹஜ் கட­மையில் ஈடு­பட்­டி­ருக்கும் அமைச்­சர்­க­ளான எம்.எச்.ஏ.ஹலீம், ஏ.எச்.எம்.பெளஸி ஆகியோர் நேரடி விஜ­யங்­களை மேற்­கொண்டு முக­வர்­களால் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் சேவைகள் பற்றி ஆராய்ந்­தனர்.

அமைச்­சர்­க­ளுடன் அமைச்­சரின் பிரத்­தி­யேக செய­லா­ளரும், ஹஜ் குழு உறுப்­பி­ன­ரு­மான எம்.எச்.எம்.பாஹிம், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் ஸமீல், ஹஜ் குழுத்­த­லைவர் கலா­நிதி எம்.ரி.சியாத் ஆகி­யோரும் கலந்து கொண்­டனர் என்றார்.

ஹஜ் கட­மையில் ஈடு­பட்­டி­ருக்கும் அமைச்­சர்கள் ஹலீம், பெளஸி ஆகி­யோரும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் மற்றும் அரச ஹஜ் குழுத்­த­லைவர் உட்­பட உறுப்பினர்களும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஸமீல் ஆகியோரும் எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளனர்.

Source: Vidivelli

LEAVE A REPLY