பாவற்கொடிச்சேனை வித்தியாலயத்திற்கு சுமார் 1 கோடி 40 இலட்சம் பெறுமதியான கட்டிடம்

0
151

(முஹம்மட் பயாஸ்)

whatsapp-image-2016-09-14-at-23-02-25மீழ்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டு பாவக்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்திற்கு சுமார் ஒரு கோடி நாற்பது இலட்சம் பெறுமதியான பாடசாலைக் கட்டிடத்திற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (14) நடைபெற்றது.

மீழ்குடியேற்ற புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் அடிக்கல் நடப்பட்டு கட்டிடத்திற்கான வேலைகள் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

வறிய மக்கள் வசிக்கும் பகுதியான பாவற்கொடிச்சேனைக் கிராமத்திற்கு இவ்வாறான பாரிய அளவிலான அபிவிருத்திப்பணிகளை அப்பிரதேசத்திற்கு வழங்கியமைக்கு அப்பகுதி மக்கள் பெரிதும் நன்றியோடு நினைவு கூர்ந்தனர்.

இதன் போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,

whatsapp-image-2016-09-14-at-23-02-30இப்பிரதேசம் அதிகம் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் வசிக்கும் பகுதியாகும். இதனை கட்டியெழுப்புவதில் தான் அதிக அக்கறை செலுத்தவுள்ளதாகவும் இப்பகுதியில் உயர்தரப் பாடசாலை ஒன்று இல்லாமல் பாடசாலை மாணவர்கள் பல மைல் தூரங்களை கடந்து சென்று உயர் படிப்புக்களை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் பிரதேசத்தின் உயர்கல்வி பின்தங்குவதாகவும் அப்பகுதி பாடசாலை சமூகம் ஒத்துழைப்பு வழங்கி கல்வி உயர் அதிகாரிகளுக்கு இப்பிரதேசத்தின் உயர்கல்வித்தேவை குறித்து அடையாளப்படுத்தி தருகின்ற நேரத்தில் இப்பாடசாலையை உயர்தரப்பாடசாலையாக தரமுயர்த்தி தரமுடியும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஹிறா பொளண்டேசனின் செயளாலர் நாயகம் மும்தாஸ் மதனி, இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் முஹம்மட், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அப்பிரதேச மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

whatsapp-image-2016-09-14-at-23-02-26

LEAVE A REPLY