ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் ஒல்லிக்குளத்திலும் மாபெரும் வீட்டுத் திட்டம்

0
174

unnamed-6நாடாளாவிய ரீதியில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகின்ற ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் ஒல்லிக்குளம் மேற்கு, ஒல்லிக்குளம் கிழக்கு, மண்முனை மற்றும் கீச்சான்பள்ளம் பகுதிகளில் மாபெரும் வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நட்டி வைக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஏறாவூர், பாலமுனை, பொலன்னறுவை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் தேசிய ரீதியில் வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் அடுத்த கட்டமாகவே, ஒல்லிக்குளம் மேற்கு, ஒல்லிக்குளம் கிழக்கு, மண்முனை மற்றும் கீச்சான்பள்ளம் ஆகிய பகுதிகளில் வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் வீடுகளை இழந்து குடிசைகளிலும், கொட்டில்களிலும் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் ஏழை மக்கள் பயனடையவுள்ளனர்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி, முன்னாள் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY