விவசாய கால்நடை நீர்பாசன மீன்பிடி கூட்டுறவுத்துறை கண்காட்சியும் விற்பனையும்

0
116

(அப்துல்சலாம் யாசீம்-)

unnamed-1கிழக்கின் எழுச்சி 2016 எனும் தலைப்பில் செப்டம்பர் மாதம் 16- 17 -18 ம் திகதிகளில் நடைபெறவுள்ள விவசாய கால்நடை நீர்பாசன மீன்பிடி கூட்டுறவுத்துறை கண்காட்சியும் விற்பனையும் தொடர்பான விளக்கம் அளிக்கும் ஊடகவியளாளர் சந்திப்பொன்று நேற்று (14) மாலை 3.30 மணியவில் கிழக்க மாகாண விவசாய அமைச்சின் கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இக் கண்காட்சியானது திருகோணமலை சம்பூர் மகா வித்தியாலயத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 9.00 மணிவரை நடைபெறவுள்ளது.

இக் கண்காட்சியை விவசாயம், கால்நடை,மீன்பிடி,நீர்பாசனம்,கூட்டுறவுத்துறை ஆகிய 5 திணைக்களங்கள் இணைந்து நடாத்தவுள்ளது. ஆரம்ப நிகழ்வு எதிர் கட்சி தலைவர் இரா. சம்பந்தன் அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளதாக மாகாண விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

இக் கண்காட்சிக்கு பாடசாலை மாணவர்கள் விவசாயிகள் கைத்தொழில்களில் ஈடுபடுவோரை கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டள்ளது.

LEAVE A REPLY